அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை: ஈரான் திட்டவட்டம்

ஈரான் எங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை: ஈரான் திட்டவட்டம்
Published on

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம். ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய ராணுவ நிலவரத்தை கணக்கில் கொண்டு இந்த காலக்கெடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல. அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்று டிரம்ப் கூறினார்.

மேலும், “ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை மற்றும் போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஈரான் எங்களுடன் பேச தயாராக இருக்கிறது,” என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com