யுரேனியம் செறிவூட்டலை 90 சதவீதமாக உயர்த்தும் ஈரான் - அமெரிக்கா கடும் கண்டனம்

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியம் செறிவூட்டலை 90 சதவீதமாக ஈரான் உயர்த்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டலை 90 சதவீதமாக உயர்த்தும் ஈரான் - அமெரிக்கா கடும் கண்டனம்
Published on

டெஹ்ரான்,

ஈரான் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை தடுக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அணுசக்தி எரிபொருளாக பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக்கூடாது என்பவை அந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள் ஆகும். இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறி, ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை படிப்படியாக மீறியது.

அதன்படி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவைத்தாண்டி யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் வரை ஈரான் ஏற்கனவே அதிகரித்து விட்டது.

இந்த நிலையில் தற்போது யுரேனியம் செறிவூட்டலை 90 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தொழில்நுட்ப பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகள் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com