

துபாய்
நீதிபதியின் பேச்சு அமெரிக்கா ஈரானிலுள்ள தங்கள் நாட்டின் குடிமக்களை விடுவிக்கும்படி கோரியதை அடுத்து பேசப்பட்டுள்ளது. அமெரிக்கா அப்பாவியான குடிமக்களை ஈரான் அடைத்து வைத்துள்ளதாக கூறியதை அடுத்து ஈரானும் பதிலடியில் இறங்கியுள்ளது.
அடிப்படை குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லாமலும், சர்வதேச சட்டங்களுக்கு எதிராகவும் அமெரிக்காவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியர்களை விடுவிக்க வேண்டும் என்று அரசு தொலைக்காட்சியில் பேசும்போது கூறினார். நீங்கள் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சொத்துக்களை அனைத்து விதிகளையும் மீறி கைப்பற்றி வைத்துள்ளீர்; இது வெளிப்படையாக நடந்த கொள்ளையாகும். அவற்றை உடனடியாக திருப்பியளிக்க வேண்டும் என்றார் லாரிஜானி.
கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அமெரிக்க சீனர் உட்பட மூன்று பேரை ஈரான் சிறைகளில் வைத்துள்ளது என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். இம்மாத துவக்கத்தில் சீன-அமெரிக்கரான ஸீயூ வாங் உளவு பார்த்ததாக கூறி 10 ஆண்டுகள் சிறை விதித்தது ஈரான்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் அவரவர் நாட்டு கைதிகளை பரஸ்பரம் பரிமாற்றிக்கொண்டனர். அதே ஆண்டில் அமெரிக்கா ஈரானின் சொத்தான 2 பில்லியன் டாலர்களை மீட்டுக் கொடுக்கும்படி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் அமெரிக்காவோ ஈரானின் பல வகையான தாக்குதல்களில் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்திற்கு இப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறது.