அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தீவிரம்

ஒரே நேரத்தில் 2 திரவ எரிபொருள் ஏவுகணைகளை செலுத்தக்கூடிய இரட்டை ஏவுகணை ஏவுதளம் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தீவிரம்
Published on: 

தெக்ரான்,

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இடையே ஈரான் தனது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்புகளையும் நிலத்தடி ராணுவத் தளங்களையும் காட்சிப்படுத்தி வருகிறது. நிலத்தடி ஏவுகணைத் தளம் ஒன்றை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி உள்ளிட்டோர் பார்வையிடும் காட்சிகளை அந்நாட்டு ஒளிபரப்பியது.

அதில், ஒரே நேரத்தில் 2 திரவ எரிபொருள் ஏவுகணைகளை செலுத்தக்கூடிய இரட்டை ஏவுகணை ஏவுதளம் இடம்பெற்றிருந்தது.

விண்வெளிப்படை, ஒரே நேரத்தில் 2 திரவ எரிபொருள் ஏவுகணைகளைச் சுமந்து சென்று ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை உள்ளிட்ட, தனது மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராணுவ உபகரணங்களின் வரிசையை காட்சிப்படுத்தியது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் அதிபர் - டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்விகளை சந்தித்ததன் விளைவாக, ஈரான் தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்த முன் எப்போதையும் விட இப்போது அதிகத் துணிச்சல் பெற்றுள்ளது என்று கருத்து வெளியாகி உள்ளது.

மேற்கத்திய பாதுகாப்புப் படைகளையும் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றித்தப்பிக்கவும், அதே நேரத்தில் தான் தாக்க விரும்பும் நாடுகளில் உள்ள இலக்குகளை அடையவும் கூடிய மிகவும் அதிநவீனத் திறன்கள் ஈரானிடம் உள்ளன என்பதை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் காட்டுவதற்காகவே இவை அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

X