பொருளாதார தடை விதிப்பா? அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை

அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஈரான் மீது பொருளாதார தடை என டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை
பொருளாதார தடை
Published on

டெஹ்ரான்,

ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற டிரம்ப் எச்சரிக்கைக்கு தரை வழி, வான், கடல் வழிகளில் தகுந்த பதிலடி தரப்படும் என ஈரான் பதில் அளித்துள்ளது.

நாளுக்கு நாள் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மோதல் போக்கு நீடித்து கொண்டே வருகிறது. ஹார்முஸ் நீரிணை மீதான அதிகார நிலைநிறுத்தலுக்காக இரண்டு நாடுகளும் கடுமையாக போட்டிப்போட்டு வருகின்றன.

இரண்டு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துவரும் நிலையில், ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் கடும் பொருளாதார தடைகளையும், அந்நாட்டு துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாகவும் அமெரிக்கா சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.

ஈரானுக்கு உதவ நினைக்கும் நாடுகளும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. சீனாவை குறிவைத்தே அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த ஈரான் ராணுவம், 'பொருளாதார தடை விதித்தால், தரை, கடல், வான் என, அனைத்து வழிகளிலும் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com