அமெரிக்கா உடனான போர் மீண்டும் தொடங்க வாய்ப்பு - ஈரான் ராணுவம்

அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை என ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்கா உடனான போர் மீண்டும் தொடங்க வாய்ப்பு - ஈரான் ராணுவம்
Published on

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுப்பறி இருந்து வருகிறது. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் இருநாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாக்குதல் நடதுவோம் என்று ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். இதற்கிடையே புதிய சமரசர திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஆனால் அதை டிரம்ப் நிராகரித்து விட்டார். ஈரானின் புதிய சமசரத்தில் எனக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறியதாவது:-

ஹார்மூஸ் ஜலசந்திக்கான புதிய சட்டவிதிகளை ஈரான் அறிமுகப்படுத்தும், இந்த ஜலசந்திக்கான புதிய நிர்வாக நடைமுறைகளும் சட்ட விதிகளும் இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும்.

இதன் பொருளாதார பலன்கள் ஈரானிய தேசத்தின் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும். இதன்மூலம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தை ஈரான் பாதுகாக்கும். இந்த நீர்வழியில் விரோத சக்திகளான எதிரிகள் மேற்கொள்ளும் அத்துமீறல்களை ஈரான் முறியடிக்கும்.

அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.

மேலும் ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் உச்சதலைவர் மொஜ்தபா காமேனியின் வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டுதலின் அடிப்படையில் பாரசீக வளைகுடாவின் புதிய நிர்வாகத்தை நிர்வகிக்கும் சமன்பாடுகளும் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com