அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை

அக்லாகிக்கு அணு ஆயுதத்துடன் தொடர்பு உள்ளது என்று கூறி, 2007-ல் ஐ.நா. அமைப்பு அவருக்கு தடை விதித்தது.

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படும்:  ஈரான் எச்சரிக்கை
Published on: 

தெஹ்ரான்

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. நீண்ட மோதலுக்கு பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால், பதற்றம் தணிந்தது.

எனினும், அவ்வப்போது அமெரிக்காவும், ஈரான் நாடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், ஈரான் மீது பெரிய அளவில் அமெரிக்கா தாக்குதலில் இறங்கவில்லை.

42 ஆண்டுகள்

இந்நிலையில், ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மெஹர்தாத் அக்லாகி இன்று கூறும்போது, அமெரிக்கா மீண்டும் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்கினால், அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கில் அதன் நட்பு நாடுகளுக்கும், பெருத்த சேதம் ஏற்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

42 ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய போதிலும், அவர் இதற்கு முன் ராணுவ பதவி எதனையும் வகிக்கவில்லை. அக்லாகிக்கு அணு ஆயுதத்துடன் தொடர்பு உள்ளது என்று கூறி, 2007-ல் ஐ.நா. அமைப்பு அவருக்கு தடை விதித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com