

டெஹ்ரான்,
ஈரான் நாட்டின் நட்டன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் அணு உலையை இஸ்ரேல் ஆளில்லா உளவு விமானம் மூலம் உளவு பார்ப்பதாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. இது பயங்கரவாத சதி என குற்றம் சாட்டப்பட்டதுடன், இதில் இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என ஈரான் சந்தேகிக்கிறது.
இந்நிலையில் ஈரானின் நாதன்ஸ் அணு உலையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்துவரும் வல்லரசு நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் எச்சரித்துள்ளார்.