

ஈரானில் தான் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மதே ஹோஜப்ரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் நடனமாடும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு ஆதரவாக #Dancing_isn't_a_crime என்ற ஹேஷ்டேக்குடன் பெண்கள் பலரும் தங்களது வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் சுற்றத்திரியும் போது, பெண்கள் நடனமாடுவதற்காக கைது செய்யப்படுவதைக் கண்டு உலகம் சிரிக்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.