அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநரின் மின்னஞ்சலை முடக்கிய ஈரான் ‘ஹேக்கர்கள்’

காஷ் பட்டேலின் 300-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநரின் மின்னஞ்சலை முடக்கிய ஈரான் ‘ஹேக்கர்கள்’
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) தலைவர் காஷ் பட்டேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஈரான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னஞ்சல் முடக்கத்திற்கு ஈரானை சேர்ந்த ‘ஹண்டாலா ஹேக் டீம்’ என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.

காஷ் பட்டேலின் மின்னஞ்சலை ஹேக் செய்து, 300-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல்களில் 2010 முதல் 2019 வரை உள்ள தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்த தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை எப்.பி.ஐ. உறுதிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com