தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றியவர் - வீடியோ வைரல்

தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
Iranian hairstylist shows off her 'teapot' hairstyle on Instagram
Published on

தெஹ்ரான்,

ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது. தலைமுடியை வித்தியாசமாக சித்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆனால் இதுவரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறார் ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய். முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டுகிறார். இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி விடுகிறார்.

இறுதியில் டீ பாத்திர வடிவம் வந்ததும் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி மற்றொரு பாத்திரத்திலும், டீ கோப்பையிலும் நிரப்பிக் காட்டுகிறார். பானம் தலையில் வேறு எந்த இடத்தின் வழியாகவும் கசியாமல், பாத்திரத்தின் வாய் வழியாக மட்டும் அழகாக வெளியேறுகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். பலரும் இந்த சிகையலங்காரத்தை வியந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com