இந்தியாவுக்கு வர இருந்த ஈரான் எண்ணெய் கப்பல் திடீரென சீனாவுக்கு பயணம்-காரணம் என்ன?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஈரான் எண்ணெய் கப்பல் தீடீரென பயணத்தின் ரூட்டை மாற்றியுள்ளது.
இந்தியாவுக்கு வர இருந்த ஈரான் எண்ணெய் கப்பல் திடீரென சீனாவுக்கு பயணம்-காரணம் என்ன?
Published on

அமெரிக்காவின் தடையில் உள்ள 'பிங் ஷுன்' என்ற கப்பல், 6 லட்சம் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வரவிருந்தது. ஆனால் இந்தக் கப்பல் தனது பாதையை மாற்றி சீனாவை நோக்கிச் செல்லவுள்ளது. இந்தக் கப்பல் இன்று (சனிக் கிழமை) குஜராத்தின் வாடினார் துறைமுகத்தக்கு வந்தடைய வேண்டியிருந்தது.

கப்பல் கண்காணிப்புத் தரவு நிறுவனமான கெப்ளர் அறிக்கையின்படி, இப்போது இந்தக் கப்பல் சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கிச் செல்கிறது. ஈரான் எண்ணெய் விற்பனையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு நிபந்தனை விதித்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக வாங்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு, 30 முதல் 60 நாட்கள் கழித்தே பணம் செலுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. 2025-ம் ஆண்டு பிங் ஷூன் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயின் தற்போதைய மதிப்பு ரூ.600 கோடியாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com