100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது

தாக்குதலில் சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது
Published on

மினாப்,

ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28-ந் தேதியே மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.

சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5-ந் தேதி பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது, குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தனர். "பள்ளி இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்" என்றும் மாகாண கவர்னர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com