உச்சவரம்பு அளவை விட பல மடங்கு யுரேனியம் வைத்திருக்கும் ஈரான் - சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை

2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

நியூயார்க்,

ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஈரான் உச்சவரம்புக்கு மாறாக 3 ஆயிரத்து 809 கிலோ யுரேனியத்தை வைத்திருப்பதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

யுரேனிய உலோகத்தை கொண்டு அணு குண்டை தயாரிக்க முடியும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் யுரேனிய உற்பத்தி குறித்து அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com