

தெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் புதிய உச்சதலைவர் ஓரிரு நாட்களில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் ஆர்ச்சி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட உச்சதலைவர் அயதுல்லா கமேனியின் மகன் மஜ்தாப் கமேனி ஈரானின் உச்சதலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.