ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 39,019 பேருக்கு தொற்று

ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,019 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 39,79,727 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 378 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 34 லட்சத்து 24 ஆயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,63,292 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com