

இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த 104 பேரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டன. அவை அவர்களது சொந்த ஊரான நினிவே மாகாணத்தின் கோச்சோ கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவர்களது உடல்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு ஒவ்வொரு சவப்பெட்டியிலும், கொல்லப்பட்டவரின் புகைப்படம் ஒட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஒரே இடத்தில் அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. அப்போது அவர்களது குடும்பத்தினர் அழுது புலம்பியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
இதுபற்றி யாசீதி மனித உரிமைகள் ஆர்வலர் மிர்சா தின்னாய் கூறும்போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களை மதிப்பதற்கு இது ஒரு முதல் படி ஆகும். மேலும் இனப்படுகொலையில் இருந்து தப்பிய மற்ற பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பது இடைக்கால நீதியின் ஒரு படியாக இருக்கும். யாசீதி இன மக்களை பாதுகாப்பதில் நாம் இன்னும் பலவற்றை செய்ய முடியும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.