ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி உயிருடன் உள்ளார்- அமெரிக்க ராணுவ அதிகாரி

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி உயிருடன் இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்க உயர்மட்ட இராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி உயிருடன் உள்ளார்- அமெரிக்க ராணுவ அதிகாரி
Published on

சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி . ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். பாக்தாதியை உயிருடனோ அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

ராக்காவின் தெற்கு புறநகர் பகுதிகளில் நடைபெற்ற வான் வழி தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லபட்டதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் அல்பாக்தாதி உயிரோடு இருக்கலாம் என அமெரிக்க ராணுவ அதிகாரி

ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சிரியாவில் சண்டையிடும் கூட்டணி படைகளை கட்டுபடுத்தும் அமெரிக்க இராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஸ்டீபன் டவுன்ச்செண்ட் கூறும் போது நான் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறேன். அல் பாக்தாதி இறந்து விட்டார் என்பது வதந்தியாக இருக்கலாம் அவர் இறந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. உளவுத்துறையிலும் மற்றும் நுண்ணறிவு பிரிவுகளில் அவர் உயிருடன் இருப்பதாக சில குறிப்புகள் உள்ளன என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com