சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக தகவல்

சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக ஐநா மனித உரிமை கவுன்சில் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக தகவல்
Published on

பெய்ரூட்,

சிரியாவில் உள்ள அல் -கர்யதைன் நகரை அண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அரசு ஆதரவு படைகள் கட்டுக்குள்

கொண்டு வந்தன. பாலைவன நகராக உள்ள அல்-கர்யதைன் நகரில், ஒருமாதத்திற்கு முன்பாக, சுமார் 20 தினங்களில் தொடர்ச்சியாக 116 பேரை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அரசு படைகளுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டிய ஐ.எஸ் இயக்கத்தினர் 116 பேரையும் பழிவாங்கும் நடவடிக்கையாக கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com