ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மகாணத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com