“விண்வெளி சுற்றுலா முக்கியமா? பூமியை முதலில் காப்பாற்றுங்கள்” - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
“விண்வெளி சுற்றுலா முக்கியமா? பூமியை முதலில் காப்பாற்றுங்கள்” - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்
Published on

லண்டன்,

அமெரிக்கவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெப் பேசாஸ், எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்சன் உள்ளிட்டோர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் விண்வெளி சுற்றுலாவை வர்த்தக ரீதியில் கொண்டு வருவதற்காக கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், விண்வெளி சுற்றுலா குறித்து கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தவர்கள், மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசரின் இந்த கருத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com