

பமாகோ
மாலியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 48 பேர் பலியாகி உள்ளனர்.
மாலி நாட்டின் கிழக்கே மேனகா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும், ஜமாத் நஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் என்ற மற்றொரு பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது.
இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை பற்றி பொதுமக்களில் சிலர் மாலி ராணுவத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர் என கூறி, மேனகா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நேற்றிரவு தொடங்கிய இந்த தாக்குதல் இன்று காலையிலும் நீடித்தது.
இதில், 48 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவர். இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.