ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டதாக தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டதாக தகவல்
Published on

கெய்ரோ,

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களும் ரஷ்ய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிரியாவில் நடந்த மேதலில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹ தைபா அல் பத்ரி மரணம் அடைந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள அனல்மின் நிலையம் அருகில் ரஷ்யர்களுக்கும் நுசரியாக்களுக்கும் (அதிபர் பஷார் அல் ஆசாத் சார்ந்துள்ள சிறுபான்மை அலாவைட் மதப் பிரிவு) எதிராக ஐஎஸ் அமைப்பினர் மேதலில் ஈடுபட்டனர். அப்பேது ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதின் மகன் ஹ தைபா அல் பத்ரி மரணம் அடைந்தார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சிறுவன் ஒருவன் துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அல் பக்தாதி பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அல் பக்தாதி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது, ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அவர் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது என்று சிலர் கூறுகின்றனர். இதை ஈராக் உளவுத் துறை அதிகாரிகளும் கடந்த மே மாதம் உறுதிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com