ஐ.எஸ் தலைவர் பாக்தாதி மரணம் உறுதிபடுத்தப்பட்டது அடுத்த தலைவர் தேர்வு தீவிரம்

பாக்தாதி மரணம் அடைந்ததை ஐ.எஸ் அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. அடுத்த தலைவர் தேர்வு தீவிரம் அடைந்து உள்ளது.
ஐ.எஸ் தலைவர் பாக்தாதி மரணம் உறுதிபடுத்தப்பட்டது அடுத்த தலைவர் தேர்வு தீவிரம்
Published on

சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி வான்வழி தாக்குதலில் பலியானதாக கூறப்பட்டது. சிரியா அரசு தொலைக்காட்சி தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது. எனினும், ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் பாக்தாதி தலைமறைவாக இருந்துவிட்டு சிரியாவில் உள்ள ராக்கா நகருக்கு புகுந்துள்ளார். அப்போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.

ரஷ்ய ராணுவம் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி கொல்லபட்டு இருக்கலாம் என கூறி உள்ளது. ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்த தகவலில் மே மாத இறுதியில் ரஷ்ய தாக்குதலில் மற்ற மூத்த குழு தளபதிகளுடன் சேர்ந்து அபு பக்ர் அல் பாக்தாதியும் கெல்லப்பட்டார் என தெரிவித்து இருந்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். பாக்தாதியை உயிருடன் அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அல் சுமேரியா தெலைக்காட்சி சேனல் ஈரானிய மாகாணமான நினிவேவிற்குள் மரணம் அடைந்ததாக உறுதிப்படுத்தி உள்ளது. ஐ.எஸ் அதன் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com