சீன அரசின் சமூகவுடைமை சமுதாயத்திற்கு ஏற்ப இஸ்லாம் மதத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - சீன அதிபர்

சீனாவில் சர்ச்சைக்குரிய ஜின்ஜியாங் பகுதிக்கு, 2014க்கு பின் முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் மேற்கொண்டார்.
சீன அரசின் சமூகவுடைமை சமுதாயத்திற்கு ஏற்ப இஸ்லாம் மதத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - சீன அதிபர்
Published on

பீஜிங்,

சீனாவில் சர்ச்சைக்குரிய ஜின்ஜியாங் பகுதிக்கு, 2014க்கு பின் முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் மேற்கொண்டார்.

அங்கு ஏராளமான உய்குர் இனம் உட்பட பல சிறுபான்மையின முஸ்லிம் மக்கள், சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 4 நாட்கள் பயணமாக அவர் கடந்த 12ம் தேதி அங்கு சென்றடைந்தார்.

அங்கு அதிகாரிகளுடன் அதிபர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது,

மக்களின் மத சம்பந்தப்பட்ட தேவைகளை சீன அரசுடனும் ஆளுங்கட்சியுடனும் ஒன்றிணைக்க மேம்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சீனாவில் உள்ள அனைத்து இன மக்களும், 'சீன தேசம், சீன கலாச்சாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன குணாதிசயங்கள் கொண்ட சோசலிசம்(பொதுவுடைமை கொள்கை)' ஆகியவற்றுடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில், அனைத்து இன மக்களுக்கும் கல்வி கற்பதற்கும் வழிகாட்டுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவில் இஸ்லாம் மதத்தை சீனாவை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள மதங்கள், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுடன் அதைக் கொண்டு வரவேண்டும்.

சீன தேசத்திற்கான வலுவான சமூக உணர்வையும் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒருங்கிணைப்பு வேண்டும். மத விவகாரங்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி, மதங்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.

இந்த தகவலை சீனாவின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com