ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 18 பேர் பலி

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 18 பேர் பலி
Published on

தெஹ்ரான்,

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இதனால், அரபு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவால் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.

அதேவேளை, ஹர்மூஸ் ஜலசந்தியை இன்றுக்குள் திறக்கும்படி ஈரானுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது. ஹர்மூஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் நரகத்தில் கதவுகள் திறக்கப்படும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஈரானின் அல்புரோஸ் நகர் மீது இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com