லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் ஒருவர் பலியானார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் இருநாடுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத், பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் ஈரான் ஏவிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கி வந்த 4 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. மேலும் ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக்கில் உள்ள தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறியிருப்பதாவது: தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 லெபனான் ராணுவ அதிகாரிகளும் ஒரு வீரரும் உயிரிழந்த சம்பவம், லெபனானின் அனைத்து பகுதி மீதும் இஸ்ரேல் உரிமை கோர முயற்சிக்கிறது என்பதை காட்டுகிறது இந்த தாக்குதல் லெபனான் ராணுவம் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிரான கொடூரமான குற்றம். லெபனானுக்கு பாதுகாப்போ, நிலைத்தன்மையோ, வளமையோ கிடைப்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com