இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு சிறை

அனைத்து மதத்தினருக்குமான வழிபாட்டு சுதந்திரத்தை கடைபிடிக்கும் ஒரே மத்திய கிழக்கு நாடு இஸ்ரேல் மட்டுமே என நெதன்யாகு கூறியுள்ளார்.
இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு சிறை
Published on

ஜெருசலேம்,

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர்கள் 2 பேர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்தும், இது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவுத்துறை மந்திரி கிடியான் சார் ஆகியோரும் கடுமையாக கண்டித்தனர். இந்த விவகாரம் குறித்து இராணுவ அதிகாரிகள் குற்றவியல் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளி மீது "தகுந்த கடுமையான ஒழுங்கு நடவடிக்கை" எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், லெபனானில் இயேசுவின் சிலையை சேதப்படுத்திய இரண்டு வீரர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் 30 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மத கட்டிடங்கள் மற்றும் கலைப்பொருட்களைக் கையாள்வதற்கான ராணுவ நெறிமுறைகள் அப்பகுதியில் உள்ள வீரர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com