

காத்மாண்டு,
நேபாளத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், "பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது" என்று அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.
Antnio Guterres (@antonioguterres) October 29, 2023 ">Also Read: