

இஸ்ரேல்,
உலகம் கொரோனாவை விட்டு மீண்டு வருவதற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரசானது தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் ஒமைக்ரானிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இஸ்ரேல் அரசானது கொரோனா வைரசை தடுக்க வெளிநாட்டினர் வருவதற்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து திரும்பும் இஸ்ரேலியர்களுக்கு 3-7 நாள் சுய தனிமை உத்தரவுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் பிரிட்டன், டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலியர்கள் செல்லக்கூடாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த புதிய பயணக் கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று மூத்த இஸ்ரேலிய சுகாதார அதிகாரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.