இஸ்ரேல்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி: டிரம்ப் சொல்கிறார்

அமைதி பேச்சுவார்த்தையில் ஈரானுடன் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி: டிரம்ப் சொல்கிறார்
Published on

வாஷிங்டன்,

ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தாக்குதல் நடத்தியது. 1½ மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த போர் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஈரான் மீதான தாக்கு தலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தையில் ஈரானுடன் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. மேலும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அமெரிக்கா உள்ளிட்ட உலக மக்களுக்கு இஸ்ரேலை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இஸ்ரேல் தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி என்பதை எப்போதும் நிரூபித்துள்ளது.

அவர்கள் துணிச்சலானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், புத்திசாலிகள். மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களை போல இல்லாமல், இஸ்ரேல் கடுமையாக போராடுகிறது. மேலும் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை நன்றாக அறிந்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com