இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..!
Published on

இஸ்ரேல்,

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக உள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (73) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com