லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 9 பேர் பலி

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 9 பேர் பலி
Published on

பெரூட்,

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் அண்டை நாடு லெபனான். இந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின்போது இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அதேவேளை, மோதலை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் - லெபனான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்கவில்லை. இதனால், இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலின்போது பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

9 பேர் பலி

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனானின் கபர் ரிமன் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com