இஸ்ரேல்: மக்கள் கூட்டத்தில் திடீரென புகுந்து விபத்து ஏற்படுத்திய வாகனம்; 7 பேர் காயம்


இஸ்ரேல்:  மக்கள் கூட்டத்தில் திடீரென புகுந்து விபத்து ஏற்படுத்திய வாகனம்; 7 பேர் காயம்
x

இஸ்ரேலில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் கொண்டு மோதி விபத்து ஏற்படுத்தியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேலின் வடக்கே அமைந்துள்ள ஹைபா நகரின் தெற்கே கார்கர் பகுதியில் வாகனம் ஒன்று, நடந்து சென்றவர்கள் மீது இன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பலர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்து உள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் கூறும்போது, மக்கள் கூட்டத்தின் மீது வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

இந்த விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முயன்ற நபர் என சந்தேகிக்கப்படுபவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை.

1 More update

Next Story