சிரியா மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் - ஒருவர் படுகாயம்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டமாஸ்கஸ்,

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருப்பது கோலான் குன்றுகள் ஆகும். 1967-ல் இஸ்ரேல்-அரபு நாடுகள் இடையேயான போரின்போது, சிரியாவிடம் இருந்து கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பின்னர் ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இதை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.20 மணியளவில் இங்கிருந்து சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்சின் தென்பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

பல ராக்கெட்டுகளை சிரியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். பொருட்சேதமும் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com