

பெய்ரூட்,
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இருதரப்பு எல்லைகளில் மோதல் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி மற்றும் 6 மருத்துவ உதவியாளர்கள் உள்பட 10 பேர் கொடூரமாக உயிரிழந்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள ஹனுயே கிராமத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் சிரியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ உதவியாளர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.