காசா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 23 பேர் பலி

2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 23 பேர் பலி
Published on

டெல் அவிவ்,

காசா - இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. காசாவின் ராபா பகுதியை நோக்கி குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் உள்பட அப்பகுதி கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com