ஏவுகணைகள் விழுந்த இடங்களை படம்பிடிக்க தடை - இஸ்ரேல் ராணுவம் உத்தரவு

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைகள் விழுந்த இடங்களை படம்பிடிக்க தடை - இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
Published on

ஜெருசலேம்,

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தின. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான், தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் விழுந்து வரும் நிலையில், அந்த இடங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க தடை விதித்து இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டின் ராணுவம் (IDF) கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏவுகணைகள் விழுந்த இடங்களின் துல்லியமான அமைவிடத்தை எதிரி நாடுகள் கண்டறிவதை தவிர்க்கவே இத்தகைய தணிக்கை நடவடிக்கைகள்(Military Censorship) விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com