இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர் குத்திக்கொலை

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர் குத்திக்கொலை
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை மேற்கு கரை பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரரான அடீல் கோல்மன் (வயது 40) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரஹ்மான் பானி படெல் (28) என்ற பாலஸ்தீன வாலிபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, அங்கு வந்த இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை சுட்டுக்கொன்றனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அடீல் கோல்மனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com