தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் பலி

லெபனான் தகவல் மந்திரி பால் மார்கோஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் பலி
Published on

டெல் அவிவ்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.

இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும், பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்தனர்.

இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தினார். இதன்படி, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். லெபனானில் இருந்து வெளிவரும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி கிராமத்தில் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், வாகனத்தில் இருந்த 2 பேர் பலியானார்கள். அதே கிராமத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 2 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் பெண் பத்திரிகையாளர் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி பலியானார். இதில், மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு லெபனான் தகவல் மந்திரி பால் மார்கோஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஹிஸ்புல்லா குழுக்களின் தளங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com