இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் கொல்லப்பட்டு உள்ளார்.
வலது:  பாதுகாப்பு மந்திரி அமீர்
வலது: பாதுகாப்பு மந்திரி அமீர்
Published on

தெஹ்ரான்

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் "பெரிய போர் நடவடிக்கைகள்" என்று அழைத்த நிலையில் ஈரானை அமெரிக்கா இன்று தாக்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தொடர்ந்தும், அமெரிக்காவுடன் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இது இன்னும் விரிவடையும் என பார்க்கப்படுகிறது.

Also Read
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி
வலது:  பாதுகாப்பு மந்திரி அமீர்

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதில், பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு ஈரானிய ஆயுத படைகளுக்கான துணை தலைமை தளபதியாக அமீர் இருந்தார். அவர் போர் விமானியாக தனது ராணுவ பணியை தொடங்கினார். இது தெஹ்ரானின் தலைமைக்கு பெரியதொரு அடியாகும்.

2025-ம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் ஈரானிய படையின் பொறுப்பை பாக்பூர் ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு தளபதியாக இருந்த உசைன் சலாமி மரணம் அடைந்த நிலையில், பாக்பூர் அந்த பதவியை வகித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com