சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை

இஸ்ரேல் அரசுக்கும், குடிமக்களுக்கும் எதிராக ஜெமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து, பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது.
சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை
Published on

டெல் அவிவ்,

காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர்.

இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் லெபனானில் இருந்தும் அவர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், லெபனானையும் இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எனினும், இரு நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.

Also Read
கூடு விட்டு கூடு பாயும் தே.மு.தி.க.: பா.ஜ.க. அளித்த வாக்குறுதி என்ன?
சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை

இந்நிலையில், சிரியாவின் தெற்கே பெய்த் ஜின் பகுதியில் ஜெமா இஸ்லாமியா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் ஆயுத கிடங்கு ஒன்றை இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த வாரத்தில் கண்டறிந்து அழித்து உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், கிடங்கில் இருந்த ஆயுதங்கள், கண்ணிவெடிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்பட எண்ணற்ற ஆயுதங்களை படையினர் கண்டுபிடித்து அழித்தனர் என தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் எதிராக வடக்கு பகுதியில் ஜெமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பானது தொடர்ந்து, பயங்கரவாதம் சார்ந்த செயல்களை ஊக்குவித்து வந்தது. தற்போதும், தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என ஐ.டி.எப். குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com