கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்..!! - ஆராய்ச்சி தகவல்

கோடையில் டெல்டா அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெருசலேம்,

சீனாவில் 2019-ம் ஆண்டு முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இன்னும் இந்த பூமிப்பந்தை விட்டு ஒழியாமல் மனித குலத்தை சோதனைக்கு ஆளாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் உருமாற்றங்களை அடைந்து, பரவி அல்லல்படுத்துகிறது.இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு, இந்த கோடை காலத்தில் டெல்டா வைரஸ் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்பதாகும்.

இதுபற்றி பேராசிரியர் ஏரியல் குஷ்மாரோ உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

கொரோனாவை பொறுத்தமட்டில் நிறைய காரணிகள் உள்ளன. எங்கள் மாதிரி, இன்னொரு டெல்டா அலை உருவாகலாம் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்று காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இதுவரையில் ஆராய்ச்சியாளர்கள், புதிதாக ஒரு உருமாறிய வைரஸ் வருகிறபோது அது தனக்கு முந்தைய முன்னோடி வைரசை வீழ்த்தும் என்று கூறி வந்தனர்.ஆனால், இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முரணாக கூறி உள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்கும்போது, டெல்டா மாறுபாடு குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிற இயக்கவியலுக்கு மாறாக, கழிவுநீர் கொண்டு நடத்திய ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகள், ஒமைக்ரான் அளவு அதிகரித்தாலும் கூட, டெல்டா வைரசின் ரகசிய சுழற்சி இருக்கும் என இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, எங்கள் மாதிரியின்படி, அகற்றப்படுகிற வரையில் ஒமைக்ரான் அளவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் டெல்டா வைரஸ் தன் ரகசிய சுழற்சியை பராமரிக்கும் என்றனர்.

டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய வைரசாக கருதப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் இயக்கவியல் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டி உள்ளது என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com