இஸ்ரேல் தாக்குதல்...ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் பலி


Israeli Strikes Kill IRGC Leader and Major Nuclear Scientists
x
தினத்தந்தி 13 Jun 2025 11:51 AM IST (Updated: 13 Jun 2025 5:29 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

தெஹ்ரான்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மேலும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருந்தது.

இந்த சூழலில், ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி மற்றும் ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக மேலும் ஒரு தகவலை உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

1 More update

Next Story