இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு

எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர்நேதன்யாகு கூறியுள்ளார்.
இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
Published on

ஜெருசலேம்,

பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் இஸ்ரேல் பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசியதாவது:-

இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இஸ்ரேல் பிரதமரின் பேச்சுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com