நகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் விமானி

விமானி ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி தனது பணிப்பெண் ஒருவருடன் கிகி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் விமானி
Published on

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் கிகி சேலஞ்ச் நடன வீடியோக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது. ஓடும் காரிலிருந்து இறங்கி காருடன் நகர்ந்து கொண்டே நடனமாடும் கிகி நடனம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் கிகி எனும் நடன காட்சியை அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். கிகி சேலஞ்ச் விபரீத செயலில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இந்த் நிலையில் பைலட் ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி தனது பணிப்பெண் ஒருவருடன் கிகி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அலெஜண்ட்ரா மன்ரிவேஸ் என்னும் அந்த பெண் பைலட் தனது விமான பணிப்பெண் ஒருவருடன் கனேடிய பாடகரான டிரேக்கின்இன் மை பீலிங் என்ற பாடலுக்கு கிகி நடனமாடுகிறார். விமானத்தை இயக்கி விட்டு அது நகரும்போதே கீழிறங்கும் அலெஜண்ட்ராவும் அந்த பணிப்பெண்ணும் விமானத்துடன் நடனமாடியபடியே முன்னோக்கி செல்கின்றனர்.

சிக்கி என்னும் இணைய காமெடியன் ஒருவர் இந்த கிகி நடன சவாலை தொடங்கி வைக்க, வில் ஸ்மித், ஹியூ ஜாக்மேன் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இந்த நடனத்தை ஆடியாயிற்று. இந்த நிலையில் மற்றவர்கள் காரிலிருந்து இறங்கி நடனமாட, ஒரு மாறுதலுக்கு அலெஜண்ட்ரா விமானத்திலிருந்து இறங்கி அந்த நடனத்தை ஆடியிருக்கிறார். டுவிட்டரில் வெளியிடப்பட்ட அலெஜண்ட்ராவின் நடனத்தை இதுவரை 25,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com