இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
Published on

ரோம்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள், இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் இந்த தடைமுடிவுக்கு வர இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21 ஆம் தேதி இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை, வங்காளதேச ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி குடிமக்கள் வருவதற்கு இந்த தடை பொருந்தாது என்றும் இத்தாலி அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com