இஸ்ரேலுடன் உள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்து - இத்தாலி அதிரடி

கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளுக்கும் இடையே புகைச்சல் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுடன் உள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்து - இத்தாலி அதிரடி
Published on

ரோம்,

ஐரோப்பிய நாடான இத்தாலி, இஸ்ரேலுக்கு நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இத்தாலியின் வலதுசாரி அரசு, சமீபகாலமாக லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து வருகிறது.

மேலும் லெபனானில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் இத்தாலிய படையினரின் வாகனப் பேரணியை நோக்கி இஸ்ரேல் படையினர் எச்சரிக்கை காட்டியதாக இத்தாலி அரசு குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்தில் ஒரு வாகனம் சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து இஸ்ரேல் துாதரை அழைத்து இத்தாலி கண்டித்தது.

இதனால் கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளுக்கும் இடையே புகைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் உடனான ராணுவ ஒப்பந்தத்தை தானாக புதுப்பிக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

ராணுவ உபகரணங்கள் பரிமாற்றம், தொழில்நுட்ப ஆராய்ச்சி, ராணுவப் பயிற்சி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்தை, 2006ம் ஆண்டு இஸ்ரேல் அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தானாக புதுப்பிக்கப்பட்டு வந்தது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் போரை கண்டித்து உலகளவில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் கொண்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி அறிவித்துள்ளது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com