இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 368 பேர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 368 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 368 பேர் பலி
Published on

ரோம்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 368 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com