

ரோம்,
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 12.31 கோடியை தாண்டி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,92,50,431 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 16 ஆயிரத்து 986 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 56 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 401 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 04 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,86,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 5,65,453 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.